மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை குறைத்து அரசு அறிவிக்கவேண்டும் என்றும், இதை மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனால், இந்த உத்தரவை எட்டு மாத காலமாக அமல்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், டி. பரதசக்கரவர்த்தி அமர்வு, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.