
மணிப்பூரில் பாஜக., தலைமையிலான பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூகி மக்கள் கூட்டணி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து கூகி மக்கள் கூட்டணி கட்சியின் தலைவர் டோங்மங் ஹவோகிப், பாஜகவுடனான உறவை முறித்து கொள்வதாக கவர்னர் அனுசுயா உய்கேக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக வடகிழக்கு மாநிலத்தை பாதித்த மணிப்பூரில் இனக்கலவரத்தில் 160 க்கும் மேற்பட்ட உயிர்கள் கொல்லப்பட்டன. இதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மோதலைக் கவனமாகப் பரிசீலித்த பிறகு, முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான மணிப்பூர் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பது பயனற்றது” என்று கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் ஹாக்கிப் குறிப்பிட்டுள்ளார்.”