சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற தனியார் பள்ளி திறப்பு விழாவில் பேசிய வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால், “பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னோடியாக விளங்குகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல நாடுகளில் அரசியல், தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் முக்கிய இடத்தில் தமிழர்கள் உள்ளனர்” என்றார்.