பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் மனோலையா என்ற ஊதுபத்தி தயாரிக்கும் கம்பனி இயங்கி வருகிறது.
இதில் அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடிரென தீ பற்றி எரிய தொடங்கி கரும்புகை வெளியேறுவதை கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்து கொண்டு கம்பெனியில் இருந்து வெளியேரினர்.
மேலும் தீ விபத்து குறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவம் இடத்திற்க்கு வந்த தீயனைப்பு துறையினர் போராடி தீயை அனைத்தனர். இருப்பினும் லட்சம் மதிப்பில் ஊதுபத்தி செய்வதற்கான மூல பொருடகள் எரிந்து நாசமானது.
தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சங்கர் நகர் போலீசார் அதற்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
திடிரென அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.