மணிப்பூர் கலவரத்தை விரைவில் கட்டுக்குள் மத்திய அரசு கொண்டுவரும்

மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் பேட்டி

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்யாமல் இருக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமையில் செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.
இதில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் கூறுகையில் :
தாம்பரம் நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் மக்களுக்கு எந்த ஒரு பயனும் ஏற்படவில்லை.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு முக்கிய காரணம் கமிஷனும் கரப்சனுக்காக மட்டுமே.
தாம்பரம் மாநகராட்சியின் 59 வது வார்டில் சாலை அமைப்பதாக கூறி இதுவரை சாலை அமைக்கப்படவில்லை.
பீர்க்கன்காரணை சுடுகாட்டிற்கு இணைப்பு சாலை இல்லாததால் நீண்ட தூரம் சடலங்களை தூக்கிச் செல்லும் நிலைமை உள்ளது.
ஒரு கட்டிட அனுமதிக்கு ஆறு மாதம் ஏழு மாத காலங்கள் இழுத்தடிக்கும் நிலை உள்ளது.
இவ்வாறு மாநகராட்சியின் அலட்சிய பூக்கள் இப்பகுதியில் கட்டுமான நிறுவனங்களே இல்லாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற நிலை உள்ளது.
தாம்பரம் மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு வருவதற்கு முன்னர் அவர்களுக்கு இருந்த சொத்து மதிப்பு என்ன தற்போது அவர்களுக்கு இருக்கும் சொத்து மதிப்புகள் என்ன போன்ற விவரங்கள் எப்படி டிஎம்கே பைல்ஸ் 1, டிஎம்கே பைல்ஸ் 2 என மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிடுகிறாரோ அதேபோல மாவட்ட தலைவர் வேத சுப்பிரமணியம் தாம்பரம் கார்ப்பரேஷன் பைல்ஸ் என்ற தலைப்பில் துணை மேயர் அறையில் நடைபெற்ற பஞ்சாயத்தில் ஆரம்பித்து மின்சார இணைப்பிற்கு எவ்வளவு பணம் கேட்கிறார்கள், கட்டிட அனுமதிக்கு எவ்வளவு பணம் கேட்கிறார்கள், குடிநீர் இணைப்புக்கு எவ்வளவு பணம் கேட்கிறார்கள் உள்ளிட்ட ஊழல் பட்டியலை வீடியோ ஆதாரங்களுடன் தாம்பரம் பகுதி மக்களின் பார்வைக்கு தெளிவாக தெரிந்து கொள்ளும்படி வைக்க உள்ளோம்.
மணிப்பூரில் நடைபெறும் விவரங்கள் குறித்த விவாதங்களுக்கு கூட எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை.
பிரதமர், உள்துறை அமைச்சர் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் விவாதித்து ஒரு தீர்வை எட்ட வேண்டும் எனக் கூறுகிறார்கள், அனைத்து கட்சி கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூரில் மிகவும் கொடுமையான விஷயங்கள் நடைபெற்று இருக்கிறது.
ஜி 20 இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் இந்தியாவிற்கு ஒரு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்களின் வேலைதான் இந்த கலவரத்திற்கு முக்கியமான காரணம்.
இந்த கலவரத்தை நிச்சயமாக சிறப்பாக கையாண்டு கலவரத்தை நிறுத்த பாஜக அனைத்து விதமான காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே அங்கு ஒரு சில இடங்களில் நிலைமை சீர் ஆகிவிட்டது கலவரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற சில இடங்களில் விரைவில் மத்திய அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் என தெரிவித்தார்.