
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 5 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தாம்பரம் சண்முகம் சாலையில் அமைக்கப்பட்ட கலைஞரின் திரு உருவ படத்திற்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் திமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் கலைஞருக்கு வீரவணக்கம் கோஷமிட்டனர். மண்டல குழு தலைவர்கள் காமராஜ், இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜோதிகுமார், ரமணி ஆதிமுலம், டி.ஆர்.கோபி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.