சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிலோவிற்கு ரூ.10 குறைந்தது.
ஆக.2 ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் தக்காளியின் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
அதன்படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிலோவிற்கு ரூ.10 குறைந்து ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் திங்கள்கிழமை தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.