தாம்பரம் மாநகராட்சி, செம்பாக்கம் மண்டலம் அலுவலகத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் அலுவலக கட்டடத்தினை திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, மண்டலக்குழு தலைவர்கள், ச.ஜெயபிரதீப், தூ.காமராஜ், சு.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.