பல்லாவரத்தில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் மீது காற்று மாசு, ஒலி மாசு புகார். பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் கடை மீது ஜெனரேட்டர் காரணமாக காற்று , ஒலி மாசு ஏற்படுவதாக அந்த ‘பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பல்லாவரம் ரேடியல் ரோட்டில் பல மாடி கட்டிடத்தில் சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் உள்ளது .இதன் பின்பகுதியில் ஜெனரேட்டர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வெளிவரும் புகையும் சத்தமும் தாங்க முடியாத அளவுக்கு இருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் கூறி வருகின்றனர். பலமுறை கூறியும் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் நடேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒலி மாசு மற்றும் காற்று மாசு பிரச்சனையை எழுப்பி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தையும் அணுக திட்டமிட்டுள்ளனர். கடந்த ஏழு மாதமாக இந்த பிரச்சனை நீடித்து வருவதாக நடேசன் நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். வீடியோ எடுத்து அரசுக்கும் புகார் அனுப்பி உள்ளனர்.