சிட்லப்பாக்கம் அடுத்த நேதாஜி சுபாஷ் சந்திரப்போஸ் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜிலா (38) வீட்டிலேயே இட்லி மாவு அறைத்து விற்பனை செய்து வந்தார்.
நேற்று இரவு வழக்கம் போல் கிரைண்டரில் மாவு அறைத்து கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய ஜெகதீஸ் மனைவி விஜிலா மயக்க நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவனை கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த சிடலப்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.