முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, அவருக்காக திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் எழுதிய மடல் வெளியாகியுள்ளது. “உங்களுக்கு சொல்ல ஒரு நல்ல செய்தி கொண்டு வருகிறேன். உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம் என்பது தான் அந்த செய்தி. நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். உங்களை காண அணிவகுத்து வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.