உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் புனித யாத்திரை பாதையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையில் தீவிரமடைந்துள்ளனர். 20 பேரில் 17 பேர் நேபாளிகள் எனக் கூறப்பட்டுள்ளது.