அயோத்தி ராமர் கோயில் அடுத்தாண்டு ஜனவரியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பூட்டு தயாரிக்கும் மூத்த கலைஞர் சத்ய பிரகாஷ் சர்மா என்பவர் ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்க கையால் செய்யப்பட்ட உலகின் மிகப் பெரிய பூட்டு ஒன்றை தயாரித்துள்ளார். இதன் உயரம் 10 அடி, அகலம் 4.5 அடி, தடிமன் 9.5 அங்குலம் மற்றும் எடை 400 கிலோ எனக் கூறப்படுகிறது..