ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு அளிக்கப்பட்ட நிலையில் அக்குழந்தையின் ஒரு கை அகற்றப்பட்ட பின்னர் தற்போது அக்குழந்தை இராமநாதபுரம் மாவட்டத்தில் அவரது இல்லத்தில் இன்று காலை உயிர் இழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியர்களுக்கு பிறந்த 1.1/2 வயது குழந்தையை உடல் நலம் சரியில்லாமல் தலை வீக்கம் இருந்ததால்
ஒரு சில மாதங்களுக்கு முன் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் குழந்தைக்கு உரிய சிகிச்சை வழங்காத நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை வழங்காமல் நர்ஸ் மூலம் தவறான ஊசி வழங்கியதும் சிகிச்சை அளிக்கப்பட்டு காரணமாக தவறான ஊசி செலுத்திய பிறகு குழந்தையின் ஒரு கை நீலமாக மாற தொடங்கியது.
பின்னர் எழும்பூர் அரசு மருத்துவமனையில் மாற்றப்பட்டு குழந்தையின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
அப்புகாரின் அடிப்படையில் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தவறான விளக்கத்தை தெரிவித்ததாக குழந்தையின் பெற்றோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
அப்போது குழந்தை நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு ஒரு கையே அகற்றும் சூழ்நிலை உண்டானது.
அக்குழந்தை இன்று காலை அவரது இல்லத்தில் இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உரிய பதிலை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சிகிச்சை அளித்த நர்ஸ் மற்றும் சிகிச்சை அளிக்க வராத மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குழந்தையின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்