அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுவதால், மனிதர்களைப் போலவே விலங்குகளும் தங்களுடைய உடல்களை பாதுகாக்க புதிய முறையைப் பின்பற்றுகின்றன. கை கால்களை நன்றாக விரித்து, தரையில் உடலைப் பரப்பி படுப்பதன் மூலம் வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்கின்றன. இதை விஞ்ஞானிகள் ‘ஸ்பூட்டிங்’ என்று வர்ணிக்கிறார்கள்.