திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தின் அருகே உள்ள திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று(ஆக 05) காலை, அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து புளிய மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த சுமார் 30 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.