குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆகஸ்ட் 7,8ம் தேதிகளில் புதுச்சேரி செல்கிறார். அவரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரி சாலைகளை அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. சாலையில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டு, சென்டர் மீடியனில் உள்ள செடிகள் வெட்டி அழகுபடுத்தப்படுகிறது. மேலும், சாலை ஓரங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசும் பணியும் நடக்கிறது.