தூத்துக்குடியில், புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய 16வது தங்கத்தேர் திருவிழாவின் முக்கிய விழாவான தங்கத்தேர் பவனி இன்று(ஆக. 05) காலை கோலாகலமாக தொடங்கியது. முக்கிய வீதிகளில் நடைபெற்ற அன்னையின் தங்கத் தேர் பவனியில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயர்கள், பங்குத்தந்தைகள் விழாவில் பங்கேற்றனர்.