மணிப்பூரின் குவாக்டா பகுதியில் நேற்று (ஆக.4) நள்ளிரவில் நுழைந்த குக்கி இன மக்கள் மைத்ரேயி இன மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. இதற்கு பலிவாங்கும் நடவடிக்கையாக குக்கி இன மக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் பதற்றம் நிலவி வருவதால் ஒன்றிய பாதுகாப்புப்படையும், காவல்துறையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.