அமெரிக்க டாலர்களின் மதிப்பைவிட, தங்கத்தின் மதிப்பு வேகமாக உயர தொடங்கியுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்த வாய்ப்பு இல்லை என்று தெரிவித்திருப்பதால், டாலர் மீதான ஆர்வம் முதலீட்டாளர்களிடம் குறைந்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் தங்களுடைய கவனத்தை திருப்பியுள்ளனர்.