ஜம்மு காஷ்மிருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவை ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இந்நிலையில், இந்த நாளின் 4வது ஆண்டு நிறைவை கருத்தில் கொண்டு, நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு அடிப்படை முகாமில் இருந்து செல்லும் அமர்நாத் யாத்திரை இன்று(ஆக. 05) நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.