பொதுவாக டில்லியில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், பன்னாட்டு விமானமாக கொழும்பு சென்று, பிறகு சென்னை திரும்பி, மீண்டும் உள்நாட்டு விமானமாக அந்தமான் சென்றடையும். இந்நிலையில், டில்லியில் இருந்து வந்த அந்த விமானம் 3 மணி நேரம் தாமதமாக அதிகாலை 2.30 மணியளவில் வந்தடைந்தது. இதனால் இலங்கைக்கும் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.