தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகை தந்த இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடையும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தையும் வழங்கி வரவேற்றார். உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள், மற்றும் பலர் வரவேற்றனர்.