இந்தியாவின் 3வது பெரிய மருந்து நிறுவனமான சிப்லாவின் பங்குகளை ஏலம் எடுக்க பிளாக்ஸ்டோன் நிதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம், சிப்லாவை நிறுவிய ஹமீட் குழுமத்தின் ஒட்டுமொத்த 33.41% பங்குகளும் அவர்களின் கையை விட்டு போகும். இந்நிறுவனத்தை உருவாக்கிய குவாஜா அப்துல் ஹமீத், காந்தி, நேரு, சர்தார் படேல் உள்ளிட்ட தலைவர்களோடு மிக நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.