ஜம்மு காஷ்மிரின், குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அப்பகுதியில், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.