கேரள மாநிலம், அட்டப்பாடியில் நேற்று இரவு காரை வழிமறித்து தந்தத்தால் 3 முறை குத்தித் தாக்கிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காருக்குள் இருந்தவர்கள் கூச்சலிட்டதால், தாக்குதலை நிறுத்திய யானை திரும்பி காட்டுக்குள் சென்றது. இதனால் யாரும் காயம் ஏற்படாமல் தப்பினர். யானை தந்தத்தால் குத்தியதில் காரில் 3 பெரிய ஓட்டைகள் விழுந்துள்ளது.