தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளது. இதை பயன்படுத்தினால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் தஞ்சை மாநகராட்சியில் உள்ள கடைகளில் இந்த வகை பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என துப்புரவு ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். அப்போது, 900 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, 15 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.