முன்னணி ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தை ரத்து செய்து ஊழியர்களை அலுவலகத்துக்கு வரவழைத்துள்ளன. ஆனால், காக்னிசன்ட் நிறுவனம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ”ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம், அலுவலகத்துக்கு வர வேண்டிய கட்டாயமில்லை” என அறிவித்துள்ளது. சமூக மூலதனம் முக்கியமானது என்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.