
உக்ரைன்- ரஷ்யா போர் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே மாஸ்கோவில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தி ஒரு கட்டிடத்தை தகர்த்தது. தற்போது கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் எண்ணை கப்பல் ஒன்றை உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன்கள் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. கருங்கடல் வழியே வெளிநாடுகளுக்கு உக்ரைன் தானியம் ஏற்றுமதி செய்வதை ரஷ்யா தடுத்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது