
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரும் தீர்மானத்தை கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை, “மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் ஜூலை 22ம் தேதி ஆளுநர் மாளிகை வந்தது. விடுமுறை தினத்தில் கோப்பு வந்தது. ஆனால், கையெழுத்திட்டு உடனடியாக ஒன்றிய அரசுக்கு அனுப்பிவிட்டேன். இனி ஒன்றிய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” என விளக்கமளித்துள்ளார்.