குரோம்பேட்டை அண்ணா நகர் ராஜேந்திர பிரசாத்சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழா மூன்றாவது வார ஆடி வெள்ளிக்கிழமை காலையில் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை அம்மனுக்கு பதினொரு மணியளவில் சிறப்பு தீபாதாரணை நடைபெற்று 12 மணி அளவில் 36 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர் அன்னதான உபயம் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர் சந்திரசேகரன் மன்னா என்ற ராஜேஷ் கண்ணா 38 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யாவின் கணவர் சந்திரசேகரன் ஹரி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.