
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அசோக் நகர் 4வது நிழற்சாலை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன், இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.