தமிழை காட்டுமிராண்டிகளின் மொழி என்று சொன்ன இயக்கத் தலைவருக்கு விருது, திருக்குறளை மலம் என்று விமர்சனம் செய்பவருக்கு தகைசால் தமிழர் விருது. என்ன கூத்து? கீ.வீரமணிக்கு அறிவிக்கப்பட்ட விருது பற்றி அண்ணாமலை ஆதங்கம்

ஆட்சியின் அவலங்களையும், அதிகார மீறல்களையும், அடிக்கும் கொள்ளைகளையும் மறைப்பதற்காக தகைசால் தமிழர் விருதை இந்த வருடம் கி.வீரமணிக்கு கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

இப்படி கொடுப்பதன் வாயிலாக, கடந்த ஆண்டு இப்பரிசைப் பெற்ற அப்பழுக்கற்ற அரசியல் பிதாமகர் நல்லக்கண்ணுவை அவமானப்படுத்துகின்றனர்.

சுதந்திரம் வேண்டாம் என மறுத்த இயக்க தலைவருக்கு சுதந்திர தினத்தில் விருது, தமிழை காட்டுமிராண்டிகளின் மொழி என்று சொன்ன இயக்கத் தலைவருக்கு விருது, திருக்குறளை மலம் என்று விமர்சனம் செய்பவருக்கு தகைசால் தமிழர் விருது. என்ன கூத்து இது? இதெல்லாம் வெறும் ஏமாற்று அரசியல். மக்களிடம் எடுபடாது.
என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை