பருப்புவகைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரியக்கூடியவை. தினசரி உணவில் பருப்பு வகைகளை சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய பலவிதமான சத்துக்கள் கிடைத்து உடல்ஆரோக்கியமாக இருக்கும். அதில் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு போன்றவற்றைதான் அதிகம் உட்கொள்வோம். ஆனால் இவை அனைத்தை விடவும் கொள்ளு அதிகசத்துக்களை உள்ளடக்கியவை என்பது தெரியுமா?

கொள்ளு பருப்பு கிமு 2000 ஆம்ஆண்டில் இருந்தே மக்களால் உண்ணப்பட்டு வருகிறது. இது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவை பூர்வீகமாக கொண்ட பருப்பாகும். ப்ரௌன்நிறத்தில் மிகச்சிறியதாக காணப்படும் கொள்ளு பருப்பில் புரோட்டீன்கள் ஏராளமான அளவில் உள்ளன. இதுதவிர கார்போஹைட்ரேட், கனிமச்சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பாலிஃபீனால்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இந்த கொள்ளு பருப்பை மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் உட்கொண்டு வந்தால், உடலை வெதுவதுப்பாக வைத்துக் கொள்ள உதவிபுரியும். கொள்ளுபருப்பை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் பெரும்பாலானோர் கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு கடையல் என்று செய்து சாப்பிடுவார்கள். எப்படி உட்கொண்டாலும், கொள்ளு பருப்பில் உள்ளசத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். கீழேவாரம் ஒருமுறை கொள்ளு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பன குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

1. எடை இழப்புக்கு உதவும் கொள்ளு பருப்பில் நார்ச்சத்து மற்றம் புரோட்டீன் அதிகளவில் உள்ளன. இவை இரண்டும் எடையைக் குறைக்கும் செயல்பாட்டில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இதில் உள்ள சில பண்புகள் உடலில் உள்ள கெட்டகொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இந்த பருப்பில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. புரோட்டீனானது பசியைத் தூண்டும் ஹார்மோன்களைக் குறைத்து, குறைவாக உணவுகளை உண்ணத் தூண்டி, எடை இழப்பிற்கு உதவிபுரிகின்றன. அதுவும் உடல் எடை வேகமாக குறைய கொள்ளு பொடியை சீரகம் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டப்பட்ட நீரில் கலந்து, ஒருநாளைக்கு 2 வேளை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

 2. இரத்த சர்க்கரை குறையும்: கொள்ளு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது இரத்தசர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் இன்சுலின் எதிர்ப்பையும் குறைக்கிறது. அதற்கு கொள்ளு பருப்பை வேக வைத்து சாப்பிடலாம் அல்லது அதை முளைக்கட்ட வைத்து வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்.

 3.கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கொள்ளு பருப்பில் லிபிட்டுகள் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. இவை கெட்டகொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உடலில் கெட்டகொலஸ்ட்ராலை நீக்குவதால், இதயத்திற்கு செல்லும் இரத்தகுழாய்களில் கொலஸ்ட்ரால் படிந்து அடைப்பு ஏற்படும் அபாயம் குறையும். அதற்கு இரவு தூங்கும் முன் ஒரு கையளவு கொள்ளு பருப்பை நீரில் போட்டு ஊறவைத்து, மறுநாள்அவற்றை வேகவைத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும்.

 4.மாத விடாய் பிரச்சனைகள் சரியாகும் மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், கொள்ளு சாப்பிட கட்டுப்படும். கொள்ளு பருப்பில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், அது உடலில் இரத்த அளவைப் பராமரிக்க உதவுகிறது. மேலும் இது யோனியில் ஏற்படும் எரிச்சல் மற்றும் துர்நாற்றமிக்க வெள்ளைப்படுதல் போன்றவற்றையும் சரிசெய்ய உதவுகிறது. அதற்கு ஒரு கையளவு கொள்ளுபருப்பை ஒருகப்நீரில் இரவுமுழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதை குக்கரில் போட்டு வேகவைத்து, அந்நீரைக் குடிக்க வேண்டும். இப்படி ஒருநாளைக்கு 3 முறை குடித்தால், இப்பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

5. விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் கொள்ளு பருப்பில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை கணிசமான அளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அத்தியாவசியமானவை. ஏனெனில் இவை அனைத்தும் ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் இரத்தஓட்டத்தை அதிகரித்து, விந்தணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகின்றன. இதுவும் இதில் உள்ள அமினோ அமிலங்கள், நொதிகளின் செல்பாட்டை அதிகரித்து, விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.

6. கல்லீரல் செயல்பாடு மேம்படும் கொள்ளுபருப்பை ஊறவைத்து பச்சையாக சாப்பிடும்போது, அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் போன்ற அத்தியாவசிய தாவர அடிப்படையிலான சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். இவை அனைத்தும் கல்லீரலை பாதுகாக்கும் ஹெபடோப்ரோ டெக்டிவ் பண்புகளைக் கொண்டவை. மேலும் இவை பித்தப்பையின் செயல்பாட்டை உறுதிப்படுத்த உதவுகின்றன. முக்கியமாக கொள்ளு பருப்பை அடிக்கடி உணவில் சேர்க்கும்போது, இரத்தம் சுத்தமாவதோடு, தேவையில்லாத நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றுகிறது.


Hacklinkgrandpashabet
grandpashabet
casibom giriş
casibom giriş
casibom güncel giriş
Hair Transplant istanbul
da pa kontrolü
güvenilir bahis siteleri
Vozol Puff
iqos terea
instagram takipçi
takipçi
antalya escort
ankara escort
bursa escort
izmit escort
viagra
bahçelievler nakliyat
istanbul evden eve nakliyat
istanbul bahçelievler evden eve nakliyat
hair transplant
istanbul anlık haberler
mavibet giriş
İstanbul Escorts
Ankara Escort
Ankara Escort Bayan
İstanbul Escort
Porno çocuk pornosu - sikiş sahte site
casibom
casibom giriş