நகராட்சி நிர்வாகத்துறை நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி 55 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் தாம்பரம் மாநகராட்சி முழுவதும் பழைய மின் விளக்குகளை அகற்றிவிட்டு புதிய எல்.ஈ.டி பொருத்தும் திட்டத்தை குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசரன் துவக்கி வைத்தார்.

முதற்கட்டமாக தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் பொருத்தப்பட்ட எல்.ஈ.டி விளக்குகளை இயக்கி வைத்தார்.

தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் ஜி.காமராஜ், ஆணையாளர் அழகுமீனா, மாமன்ற உறுப்பினர்கள் சி.சுரேஷ், கற்பகம் சுரேஷ், சேகர், நடராஜன், உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பரசன்:- நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் 55 கோடியே 81 லட்சம் செலவில் தாம்பரம் மாநகராட்சி முழுவதிலும் 44 ஆயிரம் எல்.ஈ.டி மின் விளக்குகள் பொருத்தும் திட்டம் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கப்பட்ட எல்.ஈ.டி விளக்குகளை இயக்கி வைத்துள்ளேன். 2 மாதத்தில் தாம்பரம் மாநகராட்சி பிரகாசமடையும் என்றார்.