
சேலையூரில் தாம்பரம் மாநகராட்சி அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. 34 ஆண்டுகளாக செயல்படும் இந்த பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக தலைமை ஆசிரியராக எம்.ஆனந்தபாபு என்பவர் பொறுப்பேற்றார். சேலையூர் ஊர் பிரமுகர்கள், பெற்றோர் ஆசிரியர்கழகத்துடன் இணைந்து பள்ளியின் தரம் உயரவும், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படவும் பாடுப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரின் அரசுப் பள்ளி ஆசிரியராக துவங்கி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
இந்த தகவல் அறிந்து பெற்றோர் ஆசிரியர்கழக தலைவரும் தாம்பரம் மாநகராட்சியின் 45 வார்டு திமுக கவுன்சிலருமான கொடி.தாமோதரன் ஏற்பாட்டில் சேலையூர் முக்கிய பிரமுகர்கள், அந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து தலைமை ஆசிரியரின் பணி ஓய்வு பாராட்டு நடத்த முடிவு செய்து நாதஸ்வரம், மேளத்தாளத்துடன் ஆசிரியர்கள் பழத்தட்டுகளை சீர்வரிசையாக தலைமை ஆசிரியர் ஆனந்தபாபு அவரின் மனைவி சரளா ஆகியோரை பள்ளிக்கு அழைத்துவந்து சால்வை, மாலைகளை அணிவித்து வழி நெடுக்கிலும் மாணவர்கள் சார் சார் என குரல் எழுப்பி வாழ்த்துகளை தெரிவித்து பள்ளி முன்பாக நிறுத்தப்பட்ட அலங்காரம் செய்த காரில் இருவரையும் அமரவைத்து பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.