தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் சையத், இவர் வீட்டில் இரும்பு கம்பி கூண்டில் லவ் பேட்ஸ் ஜோடிகளை வளர்த்து வந்தார். வழக்கம்போல் காலை பார்த்தபோது லவ்பேட்ஸ் அலறியவாறு ஒரே பானை மீது அமர்ந்து அச்சத்துடன் இருந்துள்ளது.

இதனால் கூண்டில் பார்த்தபோது பாம்பு ஒன்று பதுங்கியதை பார்த்துள்ளார்.

இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் நேரில் வந்து பாம்பு பிடிக்கும் கருவி மூலமாக லவ்பேட்ஸ் பானை கூட்டில் பதுங்கிய 4 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்தனர்.

அதன் பின்னர் லவ்பேட்ஸ் மகிழ்ச்சியாக களைந்து கூண்டில் பறந்தன…