தாம்பரம் மாநகராட்சியில் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதை தடுக்க கோரிமக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக ஊர்வலமாக சென்று மாநகராட்சி முன் கோஷம் எழுப்பி அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘அனகாபுத்தூரில் தம்பதியர் இருவர் வாகனத்தில் செல்லும்போது நடுரோட்டில் படுத்திருந்த மாட்டின் மீது மோதி கட்டுப்பாடு இழந்து நாகம்மாள் கீழே விழுந்தவுடன் எதிரே வந்த தண்ணீர் லாரி மோதி உடல் நசுங்கி பலியாகி உள்ளார் எனவே மாநகராட்சி சாலையில் தெரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. லலிதா ஜுவல்லரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் தாம்பரம் மாநகராட்சியின் பல்லாவரம் அலுவலகம் சென்று அங்கு பொறியாளர் திருமதி லதாவை சந்தித்து நோட்டீசை வழங்கினர். நிகழ்ச்சியில் போலீஸ்கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் பாலு
மற்றும் பலர் பங்கேற்றனர்.