
தாம்பரம் அடுத்த சோமங்கலத்தை சேர்ந்தவர் விஜ்ய்26) இவருடன் கூலி வேலை செய்யும் ரமேஷ்(16) இருவரும் இன்று அங்குள்ள கல் குட்டையில் குளிக்க (பல்சர்-220) இருசக்கர வாகனத்தில் கிஷ்கிந் சாலையில் சென்றனர். அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் திடிரென கட்டுப்பாடை இழந்து சாலையோரம் உள்ள காப்புகாட்டில் புகுந்து மரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜய், ரமேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்கிறார்கள்.