பல்லாவரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் இவரது கணவர் சின்னையா இவர் தனியார் நிருவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

பல்லாவத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து திருமுடிவாக்கத்தில் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக கணவர் இருசக்கர வாகனத்தை ஓட்ட ,மனைவி நாகம்மாள் பின்னால் அமர்ந்த கொண்டு திருமுடிவாக்கம் நோக்கி அனகாபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது,

எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மாடு மீது மோதி உள்ளது.பின்னால் அமர்ந்திருந்த மனைவி நாகம்மாள் வலது பக்கமாக சாலையில் விழுந்துள்ளார், அப்போது ஸ்ரீ ஸ்ரீனிவாசா பெயர் கொண்ட தண்ணீர் லாரிபின் டயர் நாகம்மாள் தலை மீது ஏறியதில் தலை தனியாக துண்டாகி தூக்கி வீசப்பட்டது.

இதைப் பார்த்த லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடி உள்ளார் .

லாரி மோதி மனைவி தலை துண்டாகி இருந்ததைப் பார்த்த கணவர் மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லாரி மோதி கணவன் கண் முன்னே மனைவின் தலை துண்டாகி நடந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் இருக்கும் மாடுகளால் விபத்தில் சிக்கி அடிக்கடி உயிர்கள் பறிபோவது தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகிறது,மாடுகளை சாலையில்
சுற்றித் திரியிடம் மாட்டின் உரிமையாளர் மீது தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றன.