வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. அனைவருக்குமே குழந்தை என்றால் பெரும் ப்ரியம். தங்களது குழந்தைகளை அன்போடு மட்டுமின்றி அக்கறையோடு பார்த்துக்கொள்வதற்கும் பலர் துடிப்பார்கள்.
ஆனால் அவர்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விஷயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.
முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு பற்றவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தியுங்கள். அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை கூறுவார்.
பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது.