ரயில்கள் தாமதத்தால் பயணம் செய்யாதோருக்கு முன்பதிவு டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. சுமார் 3 மணி நேரம் தாமதமாக வந்த ரயில்களில் பயணம் செய்யாதவர்களுக்கு முழு பணமும் திருப்பித் தரப்படும் என தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்யாத பயணிகள் நிலைய அதிகாரிகளிடம் காலதாமத சான்று பெற்று பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.