மீனம்பாக்கத்தில் தேசிய அளவில் மகப்பேறு மருத்துவர்களின் இரண்டுநாள் மாநாடு துவங்கியது, முதல் நாள் மாநாட்டு துவக்கமாக பெண்கள் தங்களின் உடல்நலனில் அக்கரை காட்ட வேண்டும் குறிப்பாக இளம் பெண்கள் உள்ளிட்டோரை பாதிக்கும் இரத்தசோகை, ஆரம்பகால் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “மாற்றம்” என்கிற வார்த்தை புரிந்தும் தெரிந்து கொள்ளவேண்டும் என ஊர்வலமாகவும், மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அதனையடுத்து செய்தியார்களிடம் பேசிய இந்திய மகப்பேறு மருத்துவ சம்மேளன தலைவர் ரிஷிகேஷ் பாய்:- உலக அளவில் பிரசவ கால இறப்பு 2030ல் ஒரு லட்சத்திற்கு 70 என குறைத்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தற்போது இந்தியா முழுவதும் ஒரு லட்சம் பிரசவத்தின் போது 97 இறப்புகள் ஏற்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மகப்பேறு மருத்துவர்கள் அரசின் சிறப்பான செயல்பாட்டால் 54 மிகவும் குறைந்துள்ளது. குறிபிட்ட இலக்கை தற்போதே அடைதிருப்பது மருத்துவர்கள் அரசையும் பாராட்டுகள் என்றார்.
காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவர்கள் சங்க செயலாளர் உமையாள் முருகேசன் பேட்டியில் :- இந்திய அளவில் பெண்களின் 50% பெண்களுக்கு ரத்தசோகை உள்ளது. அவர்களை பார்க்கும் போதே மிகவும் சோர்வாக காணப்படுவார்கள். அதனை இயல்பு என விடாமல் அவர்களின் குடும்ப ஆண்கள் அக்கரை செலுத்தி மருத்துவரை அணுக வேண்டும் குறிப்பாக 13 வயது முதல் 19 வயதுடைய இளம் பெண்களுக்கு இந்த இரத்த சோகை பாதிப்பு அதிகம் என்றார். அதுபோல் பெண்களை தாக்கும் புற்றுநோய் மார்பகம், கற்ப பை வாய் பகுதியாகும் இதில் மார்பக புற்றுநோய் சுய பரிசோதனை மூலம் அறிந்து உரிய நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றால் மீண்டுவிடலாம் காலம் கடந்து அடுத்த அடுத்த கட்டத்தில் செல்லும்போது அதன் தாக்கம் அதிகரித்து பாதிப்பளில் இருந்து மிள்வது சிரமம் ஏற்படும் என கூறினார்.