தேவையான பொருட்கள்: சுண்டைக்காய் 200 கிராம், வெங்காயம் 100கிராம், மிளகாய் 3 பீஸ், புளி எலுமிச்சை பழ அளவு, கறிவேப்பிலை சிறிது, மிளகாய் வற்றல் 6 பீஸ், சீரகம் 2 ஸ்பூன், பூண்டு 1 பீஸ், அரிசி மாவு 1 ஸ்பூன், மஞ்சள்தூள் 1 ஸ்பூன், உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு, கடுகு, வெந்தயம் சிறிதளவு செய்முறை: முதலில் மசாலா பொருட்களை எண்ணையில் வறுத்து வைக்கவும். வறுத்த மசாலா பொருட்களை அரைத்துக் கொள்ளவும். சுண்டைக்காயை சுத்தம் செய்து வைக்கவும். புளியை கரைத்துக் கொள்ளவும். சுண்டைக்காயுடன் போதுமான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். வெந்தவுடன் புளித்தண்ணீர் சேர்த்து கலக்கவும். பிறகு மசாலா பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கிளறி இறக்கவும். இப்போது சூடான சுண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி!!!