நாடு முழுவதும் அதிக வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடியே இந்த ரயிலை தொடங்கி வைத்து வருகிறார். இது பகல் நேர ரயில் ஆகும்:
தற்போது சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் 6-ந் தேதியே இந்த ரயில் விடப்படும் என்றும் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்றும் தெரிகிறது. இதனை தெற்கு ரயில்வே அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர். இதற்கிடையே வந்தே பாரத் ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே இடையில் நிற்கும், அதற்கு வசதியாக போக்குவரத்து சிக்னல்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. இந்த வேலை தீவிரமாக நடப்பதால் தான் கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்ட ரயில்கள் தாமதமாக வந்து செல்வதாக கூறப்படுகிறது.
நெல்லையிலிருந்து காலை புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் சென்னை வந்து சேரும் சென்னையிலிருந்து மதியம் புறப்பட்டு இரவு 10 மணிக்கு மேல் நெல்லை சென்று சேரும்.