
ஆலந்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 60 அணிகள் கலந்துக்கொண்ட கிரிகெட் போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்து அவர்களுக்கு கிரிகெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பரசன்:- மணிப்பூர் கலவரம் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் நாட்டில் எங்கும் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழமுடியாத சூழல் உள்ளது. ராமேஸ்வரத்தில் பாஜக நடத்தும் 9 ஆண்டுகால சாதனையில் 15லட்சம் வழங்கியது. 18 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஜி.எஸ்.டி வரி அமுல் செய்து மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது என்பதை சொல்வார்களா என கேள்வி எழுப்பினார்.
அவர்களுக்கு முட்டுகொடுக்கும் அதிமுகவை சேர்ந்து தேர்தல் சந்திப்போம் இளைஞர்கள் ஆதரவுடன் வெற்றிபெருவோம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், 12 வது மண்டலகுழு தலைவர் சந்திரன், இளைஞரணி, விளையாட்டு அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.