மணிப்பூர் பாலியல் வன்கொடுமையை தடுக்கா ஒன்றிய பாஜக அரசை கண்டித்து

செம்பாகத்தில் தாம்பரம் மேயர் தலைமையில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை தடுக்காத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தாம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக மகளிர் அணி சார்பில் செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் எஸ்.புகழேந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கற்பகம் சுரேஷ், கல்யாணம் மணிவேல், ரமணி ஆதிமூலம், லிங்கேஸ்வரி பாபு, ரமாதேவி செந்தில்குமார், கமலா சேகர், ராஜேஸ்வரி சங்கர், மதுமிதா மதன், சசிகலா கார்த்திக், திமுக நிர்வாகிகள் விமலா, பேகம், சாமுண்டீஸ்வரி, ஜனனி சுரேஷ்பாபு, ருக்மணி சக்தி, சாவித்திரி புருஷோத்தமன், மஞ்சு ஜெயபாலன், மஞ்சுளா கருணாகரன், சூர்யா பொன்வேல், செல்வி பாபுஜி, ரேணுகா நடராஜன், மேகலா சேட்டு, சாந்தி ரமேஷ், நஸீமா, நிரோஷா, சுஜாதா, மணிமேகலை குமார்,
தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆதிமாறன், பகுதி செயலாளர்கள் இரா.சுரேஷ், மாடம்பாக்கம் நடராஜன், பெருங்களத்தூர் சேகர், நிர்வாகிகள் ஆர்.எஸ்.சங்கர், தாம்பரம் நாராயணன், லட்சுமிபதி ராஜா, மதுரப்பாக்கம் புருஷோத்தமன், விநாயகமூர்த்தி, அகரம்தென் ஜெகன் உட்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.