![](https://gstroadnews.com/wp-content/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-29-at-3.40.22-PM.jpeg)
கூத்தாநல்லூரைப் பூர்வீகமமாகக் கொண்ட பாரம்பரியமிக்க சடையன் குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் ரிஜ்வானா பேகம் சிங்கப்பூர் நாடாளுமன்ற நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
கூத்தாநல்லூர் மர்ஹூம் பேனாத்தானா ஹாஜி அப்துர் ரஹீம், சடையன் ஹஜ்ஜா மஹ்மூதா பேகம் அவர்களின் மூத்த மகளான டாக்டர் ரிஜ்வானா பேகம் அப்துர் ரஹீம், சிங்கப்பூர் நாடாளுமன்ற நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் ரிஜ்வானா சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பொதுப் பாதுகாப்பு பாடத்திட்ட தலைவராகவும், துணை பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். குடும்ப நல சமுதாய மேம்பாட்டு அமைச்சின் விருதை 2018 ஆம் ஆண்டு பெற்று இருக்கிறார்.
டாக்டர் ரிஜ்வானா பேகம் அவர்களுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். அவரின் சேவை மேன்மேலும் உயர்வு பெறட்டும்.
பிரபல தமிழ் எழுத்தாளர் Sadayan Sabu அவர்களின் உறவினர் என்பது கூடுதல் தகவல்.