தாம்பரம் மாநகராட்சியின் சாதாதணகூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது.
இதில் துணை மேயர் ஜி.காமராஜ், ஆணையாளர் அழகு மீனா ஐ.ஏ.எஸ் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
74 முக்கிய பொருள்களை மன்ற கூட்டத்தில் முன் வைத்து விவாதிக்கப்பட்டது.
அப்போது மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உள்ளாட்சி பிரமுகர்களாக மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிட தமிழக முதலமைச்சர் அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
அதனையடுத்து பேசும்போது குப்பைகளை அகற்ற அவர் லேண்ட் எனும் தனியார் நிறுவனம் 3,4,5 ஆகிய மூன்று மண்டலங்களின் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் முறையாக கால்வாய் அடைப்புகளை அகற்றுவதில்லை முழுமையான பணிகளை மேற்கொள்ளவில்லை என மாமன்ற உறுப்பினர்கள் சரமாரி புகார் தெரிவித்தனர்.
அதுபோல் மாநகராட்சிகுட்பட்ட அடுக்குமாடி கட்டிட அனுமதி விரைந்து வழங்கிட வேண்டும் என ஒரு தரப்பு திமுக மாமன்ற உறுப்பினர்களும், மற்றொரு தரப்பினர் நகரமைப்பு குழுவினர் ஆய்வு செய்திடும் வரையில் அனுமதி வழங்ககூடாது என மாறி மாறி பேசியதால் திமுக கவுன்சிலர்கள் இரு தரப்பாக எழுந்து கூச்சலிட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது மாநகர மேயர் வசந்தகுமாரி சமாதான செய்த நிலையில் ஆனையாளர் அழகுமீனா முறையாக அடுக்குமாடி கட்டிட அனுமதிக்கு விண்ணப்பம் செய்து நடைமுறையை பின்பற்றி இருந்தால் ஆணையரான தான் தலையீட்டு மேல் அதிகாரிகள் முன்னிலையில் அனுமதி வழங்கப்படும் என கூறினார்.
இதனால் தாம்பரம் மாநகராட்சியில் ஒருமணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு காணப்பட்டது. அப்போது அதிமுக மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சேலையூர் சங்கர் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.