என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக பாமகவினர் ஆர்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். அப்போது பேருந்துகள் போலீஸ் வாகனங்கள் அடித்து சேதமான நிலையில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டர்.
இதனை கண்டிக்கும் விதமாக தாம்பரத்தில் பாமக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கருப்பசாமி தலைமையில் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் பேரூந்து உள்ளிட்ட வானகங்களை மறித்து சாலையில் படுத்த பாமகவினர் 50 க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் மார்கமாக போக்குவரத்து சில நிமிடங்கள் தடைப்பட்டது.
இதனையடுத்து தாம்பரம் காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் போலீசார் பாமக வினரை குண்டுகட்டாக தூக்கி சென்று சாலையேரம் விடுவித்தனர். அங்கு பதினைந்து நிமிடங்களாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் அதனையடுத்து கனைந்து சென்றனர், அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.